வணிகர்களின் ஓட்டு யாருக்கு? இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் வெள்ளையன் பேட்டி


வணிகர்களின் ஓட்டு யாருக்கு? இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2019 9:45 PM GMT (Updated: 2 April 2019 8:31 PM GMT)

இந்த வார இறுதிக்குள் யாருக்கு வணிகர்கள் வாக்களிப்பது என்பது அறிவிக்கப்படும் என்று வெள்ளையன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்தலில் வணிகர்கள் ஒரு கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல இருக்கிறோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வியாபாரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். வங்கிகளும், பெரும் முதலாளிகளுக்குத்தான் கடன்கள் வழங்குகின்றன. இதேபோல் விவசாயமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நாடு முன்னேறவில்லை. சுயதொழில், சில்லரை வணிகத்தை வெளிநாட்டினர் கைப்பற்றத்தான் உலக வர்த்தக ஒப்பந்தம். ஆனால் இதற்கு நமது அரசியல்வாதிகள் துணை நிற்கிறார்கள். எனவே சில்லரை வணிகத்தை காப்போம், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவோம் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளோம். அதை யார் நிறைவேற்றுவோம் என்கிறார்களோ? அவர்கள் எழுத்து மூலம் எங்களுக்கு பதில் தரவேண்டும். இந்த வார இறுதிக்குள் யாருக்கு வணிகர்கள் வாக்களிப்பது என்பது அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story