தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகப்பட தோன்றுகிறது; கமல்ஹாசன் பேட்டி


தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகப்பட தோன்றுகிறது; கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 4 April 2019 6:13 PM IST (Updated: 4 April 2019 6:13 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகப்பட தோன்றுகிறது என கமல்ஹாசன் பேட்டியளித்து உள்ளார்.

மதுரை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும்.  இதனுடன் சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும், அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இதில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனிசாமிக்கு ஆதரவாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழனின் குரல் தலைநகருக்கும் கேட்க வேண்டும் என்றார். வேட்பாளர் வெற்றி பெற்று, மக்களுக்கு சரியாக பணி செய்யவில்லை என்றால், ராஜினாமா கடிதத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சி வழங்கிட செய்யும் என்றார்.

சமீபத்தில், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.  அவர்களுடன், தேர்தல் பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது.

இதனுடன் அவரது மகன் மற்றும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த வருமான வரி துறையினரின் சோதனைகள் பற்றி மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசும்பொழுது, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகப்பட தோன்றுகிறது என கூறினார்.

Next Story