வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் தூண்டும் பேச்சு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது தி.மு.க. புகார்


வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் தூண்டும் பேச்சு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 5 April 2019 10:54 PM IST (Updated: 5 April 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திருப்போரூரில் 4–ந் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

சென்னை, 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.கிரிராஜன் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திருப்போரூரில் 4–ந் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘‘வாக்குச்சாவடிகளில் என்ன நடக்க இருக்கிறது? நாம் மட்டும்தான் வாக்குச்சாவடிகளில் இருப்போம். பிறகு என்ன, இதுபற்றி வெளிப்படையாக பேசவேண்டுமா? உங்களுக்கு புரிந்துவிட்டதா?’’ என்று பேசினார்.

தேர்தல் அன்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றத் தூண்டுவது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் உள்பட குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணிக்கு நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு பணியமர்த்தப்படும் கட்சிகளின் முகவர்களின் அடையாளத்தை மிக உன்னிப்பாக கவனிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் தூண்டும் வகையில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story