சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 6 April 2019 4:21 AM GMT (Updated: 6 April 2019 4:23 AM GMT)

சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.  இந்த நிலையில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் நாளை மறு நாள் (ஏப்.8) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Next Story