ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் - ப.சிதம்பரம்
ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
திருப்பரங்குன்றம்
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் அறிக்கை மதுரை திருப்பரங்குன்றத்தில் வெளியிடப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார். இந்தியாவில் பல தேர்தல்களில் பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்துள்ளார்கள். பிரதமர் யார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வர். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற சிறப்பான வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல் எங்களின் உண்மையான ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும் .ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை எளிய மக்கள் மீது வரிச் சுமைகள் இருக்காது என கூறினார்.
Related Tags :
Next Story