“துரோகிகளின் கூட்டணிக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்” டி.டி.வி.தினகரன் ஆவேச பேச்சு
“துரோகிகளின் கூட்டணிக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்” என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நெல்லையில் பிரசாரம் செய்தார். அவர் திறந்த வேனில் சென்று பரிசு பெட்டக சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
நெல்லை டவுன், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்து உள்ளது. இந்த தேர்தல் ஏன் வந்தது என்று எண்ணி பார்க்க வேண்டும். நமது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். இதன் காரணமாக இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி துரோகிகள் கூட்டணி. மற்றொரு கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. துரோகிகள் கூட்டணி என்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒன்றாக நிற்கும் கூட்டணி. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு துரோகம் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை 95 சதவீதம் தொண்டர்கள் நமது கட்சியில் தான் இருக்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கோபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது. மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை ஏற்றியது.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்த ஒரே காரணத்தால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்தது. அந்த அரசுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது.
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால் தான் நாங்கள் அதை துரோகிகள் கூட்டணி என்று சொல்கிறோம். இந்த தேர்தலில் துரோகிகளின் கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய முற்போக்கு கூட்டணி ஆகிய கூட்டணிகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் நாங்கள் அந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இதேபோல் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? அவர் சொல்லமாட்டார். ஏனென்றால், தி.மு.க. பதவி, ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story