அறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு: திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்


அறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு: திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2019 9:09 AM IST (Updated: 8 April 2019 9:09 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. 1998-ல் வைக்கப்பட்ட இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் குடியிருப்போர்கள், மற்றும் தெருவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என முழக்கம் இட்டனர். பரபரப்பான தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story