லாப நோக்கில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்


லாப நோக்கில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 9 April 2019 7:23 AM GMT (Updated: 9 April 2019 7:23 AM GMT)

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்திருக்கும் சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சென்னை:

பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும்,  உயர்நீதிமன்றம் உத்தரவு 8 வாரத்துக்குள் கட்டணமின்றி இலவச தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Next Story