“ரஜினிகாந்த் நல்லதை பாராட்டக்கூடியவர்” அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
“ரஜினிகாந்த் நல்லதை பாராட்டக்கூடியவர்” அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
சாத்தூர்,
சாத்தூரில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் மனசாட்சி உள்ள ஒரு மனிதர். நல்லதை பாராட்டக்கூடியவர். அதனால் தான் நதி நீர் இணைப்பை பாராட்டியிருக்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் - தி.மு.க. அரசு. பா.ஜனதா அரசு அதை நடைமுறைப்படுத்தியது. அ.தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது நீட் தேர்வை நீக்கக்கோரி உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.
இந்த கோடை காலத்திலும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்கிறது. கமல்ஹாசன் குறை சொல்லியே பழக்கப்பட்டவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story