தேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, தேர்தல் பிரசாரத்தின் போது கண்கலங்கி அழுத சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது.
தர்மபுரி
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, தேர்தல் பிரசாரத்தின் போது கண்கலங்கி அழுத சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது.
நேற்று இரவு கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சென்று கொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை பார்த்த குழந்தைகள் பின்னால் ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி மாணவர்களிடம் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேச நினைத்த அன்புமணி தன்னையும் அறியாமல், கூட்டத்தின் நடுவே கதறி அழுதுள்ளார். இவ்வளவு பாசம் வைத்துள்ள மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அழுதுகொண்டே பேசியுள்ளார்.
இச்சம்பவம் அங்கு கூடிநின்ற பொதுமக்களை கண்கலங்க வைத்துள்ளது.
Related Tags :
Next Story