நெருங்கும் தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்
தேர்தல் தேதி நெருங்குவதால் முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும் என ஸ்டாலின் பேசிவரும் நிலையில், தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அகல வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் என தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் நிலை குறித்து, தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்
நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து சேந்தமங்கலத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் எதையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார். அ.தி.மு.க சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்கும் வேளையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெறும் கதைகளை மட்டுமே பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
Related Tags :
Next Story