சென்னையில் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.5 கோடி பறிமுதல்
சென்னையில் பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தினுடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.
இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.13.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள், நாமக்கல்லிலுள்ள 4 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story