நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி ; நாட்டின் 15-வது பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார் -ஓ.பன்னீர்செல்வம்
நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி நாட்டின் 15-வது பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி,
தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தார். பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார். மேடையில் முதல்வர், துணை முதல்வர், பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்டோர் உள்ளனர்.
பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது. நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி நாட்டின் 15-வது பிரதமராக மீண்டும் பதவி ஏற்பார் என கூறினார்.
Related Tags :
Next Story