4 தொகுதி இடைத்தேர்தல்; நடுவிரலில் மை வைக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் வாக்கு பதிவு செய்திருக்க கூடும். இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story