மாநில செய்திகள்

‘இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது’ மடாதிபதிகள் பேட்டி + "||" + Do not vote for anti-Hindu forces

‘இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது’ மடாதிபதிகள் பேட்டி

‘இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது’ மடாதிபதிகள் பேட்டி
‘நாடாளுமன்ற தேர்தலில் இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது’ என சென்னையில் மடாதிபதிகள் கூறினர்.
சென்னை, 

சென்னையில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை, காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர், திருவலம் சர்வமங்களா பீடம் சாந்தா சுவாமிகள் மற்றும் துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்ட 11 பேர் கூட்டாக நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்துக்களுக்காக குரல்

கோவில்கள் நிறைந்த பூமியாக திகழும் தமிழகத்தில் தான், கடவுள் இல்லை என்ற பிரசாரமும் நடக்கிறது. தமிழக அரசின் சின்னத்திலும் கோவில் தான் இருக்கிறது. ஆனால் இந்து மத கடவுள்களை மட்டும் இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடக்கிறது. இதை சிலர் திட்டமிட்டு தங்களின் சுயநலத்திற்காக செய்கிறார்கள்.

இந்துக்களை, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்து கல்வி நிலையங்கள் புறக்கணிக்கப்படுகிறது, இந்துக்களின் கோவில்கள் அரசின் பிடியில் இருக்கிறது. அதை தனித்து இயங்க வைக்க வேண்டும். பிற மத கல்வி நிறுவனங்களை போல இந்து கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். இந்துகளுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவராக இருக்கும் தலைவர் இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நியாயம் தானா? நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை என்று அவர்கள் சொல்வது வரவேற்கத்தக்கது,

அதேநேரத்தில் அந்த வார்த்தை வாய் அளவில் இருந்து வரும் வார்த்தையா? அல்லது உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தையா? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது.

யாரெல்லாம் நம்மை மதிக்கிறார்கள், மதமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று யார் சொல்லுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்துக்களை யார் புறக்கணிக்கிறார்கள் என்பதை அடையாளம் காணுங்கள். குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை.

இந்துக்களுக்காக யார் பேசுவார்கள், யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்துக்களின் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.