மாநில செய்திகள்

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை; ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + Vellore constituency to stop the election tax audit; Stalin's accusation

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை; ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை; ஸ்டாலின் குற்றச்சாட்டு
வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
வேலூர்,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  இதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதி தொடங்கியது.  தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.

இதனை அடுத்து, தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.  வாக்கு எண்ணிக்கை மே 23ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.  உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிா் ஆனந்தால் நிா்வகிக்கப்படும் பள்ளி, கல்லூாி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொண்டனா். மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் உள்ளிட்டோருக்கு சொந்தமான பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாாிகள் தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.  இந்நிலையில், வேலூர் ஆம்பூர் பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதன்பின் வேட்பாளருடன் அப்பகுதியில் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதன்பின் குடியாத்தம் பகுதியில் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் பேசும்பொழுது, வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக தொழில் முனைவோர் மாநாடு; முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் பேட்டி
உலக தொழில் முனைவோர் மாநாட்டில் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் பேட்டியில் கூறினார்.
2. திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூ 10 கோடி வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும்: ஸ்டாலின்
வெள்ள நிவாரணப்பணிகளை அரசு முடுக்கி விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. பள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்
பள்ளிகொண்டா அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை
கோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.