கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 14 April 2019 9:17 PM GMT (Updated: 14 April 2019 9:17 PM GMT)

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் எனறு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி தருவோம். அ.தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும்’ என்று தெரிவித்தார்.

அப்போது காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநில நெசவாளரணி நிர்வாகி தி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தி.மு.க. பாலாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தற்போதுள்ள அரசு இதுவரை அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. தற்போது நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ள திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். மதவாத கூட்டணியை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கூட்டத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story