ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்


ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
x
தினத்தந்தி 16 April 2019 6:15 PM GMT (Updated: 16 April 2019 6:15 PM GMT)

ஆண்டிப்பட்டியில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போலீசாரை, தொண்டர்கள் தடுக்க முயன்றபோது, போலீசார்  4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகத்திற்குள் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை சென்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. பணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தற்காப்புக்காகவே வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது விசாரணைக்குப்பின்பே தெரியவரும்” என்று கூறினார்.

Next Story