மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல் + "||" + Test conducted in Tamilnadu 1,022 kg gold seized Chief Electoral Officer Information

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-


வேலூரில் நடந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்து விட்டேன். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 முறை என்னிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டது. வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறையின் அறிக்கை, எப்.ஐ.ஆர். ஆகியவையும், எனது அறிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை தேர்தல் நடவடிக்கையாக தமிழகத்தில் ரூ.135.41 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 15-ந்தேதி மட்டும் ரூ.2.50 கோடி கைப்பற்றப்பட்டு இருக்கிறது. கோவையில் அதிகபட்சமாக ரூ.1.38 கோடி பிடிபட்டது. தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை மட்டும் ரூ.56.55 கோடி கைப்பற்றியுள்ளனர்.

பி.எஸ்.கே. பொறியியல் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.14.17 கோடி சிக்கியுள்ளது. எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு வசிப்பவருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதுபோல ரூ.37.42 லட்சம் மதிப்புள்ள மது வகைகளும், ரூ.37.68 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 1,022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி உள்பட ரூ.294.38 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

15-ந்தேதி சென்னையை அடுத்த இரும்புலியூரில் 23 கிலோ தங்கம் சிக்கியது. அதோடு, ரூ.8.15 கோடி மதிப்புள்ள மடிக்கணினி, குக்கர், சேலை, துணி வகைகள் சேர்த்து மொத்தம் ரூ.438.70 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 2 ஆயிரத்து 490 புகார்கள் பெறப்பட்டு, 1,127 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 4 ஆயிரத்து 525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களான சேலம் வாக்குப்பதிவு அதிகாரி வி.நித்யா, சேலம் தொடர்பு அதிகாரி எஸ்.ரமேஷ், திருப்பூர் தபால் வாக்குச்சீட்டு அலுவலர் எஸ்.செந்தில்குமார், வாக்குப்பதிவு அதிகாரி எம்.திலகமாதா ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். தஞ்சாவூர் பறக்கும் படையில் வீடியோ படப்பிடிப்பாளராக இருக்கும் ஆர்.ராஜ்கமல் காயமடைந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோடை மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கோடை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
புதுக்கோட்டை அருகே கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
3. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.
4. தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டம் பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி
தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.
5. டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது கனிமொழி எம்.பி. பேச்சு
டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.