மாநில செய்திகள்

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல் + "||" + IT Raid at AMMK office in andipatti

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல்

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல்
ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வருமான வரித்துறையின் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் இந்த பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பணம் வைத்திருந்ததாக அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல்,  தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழி வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மக்களவை தேர்தல்: கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு
வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2. என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்: தங்க தமிழ்ச்செல்வன்
என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
3. பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவோம்: ராகுல் காந்தி ஆவேசம்
பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
4. மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மோடி தலைமையில் இன்று புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டம்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை