கோயம்பேட்டில் வெளியூர் செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் போராட்டம்


கோயம்பேட்டில் வெளியூர் செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 April 2019 7:52 PM GMT (Updated: 2019-04-18T01:22:34+05:30)

கோயம்பேட்டில் வெளியூர் செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் கோயம்பேட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

வெளியூர்களுக்குச் செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், போதிய பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்றும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Next Story