நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்


நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 1:50 AM GMT (Updated: 2019-04-18T07:39:11+05:30)

தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும்  பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கே வரிசையில் நின்றதை காண முடிந்தது. 

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். 


Next Story