காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு


காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 18 April 2019 6:18 AM GMT (Updated: 2019-04-18T12:31:40+05:30)

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார்.தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றும், மற்ற தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். 

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் தனது வாக்குகளை பதிவு செய்தனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் அன்புமணி ராமதாஸ்..

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தனது வாக்கினை பதிவு செய்தனர்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை வாக்களித்தார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா, எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் ஆகியோர் வாக்களித்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னை சூளைமேட்டில் 18,19,20 ஆகிய 3 வாக்கு சாவடிகளில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

போடி அருகே சென்ட்ரல் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி கேட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம், இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தயாநிதி மாறன் வாக்களித்தார்.

சேலம் அருகே உள்ள ஓமலூர் வேடப்பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த முதியவர் கிருஷ்ணன்(74) மயங்கி விழுந்து பலியானார்.

ஜம்மு-காஷ்மீரில்  திருமண கோலத்தில் வந்து புதுமண தம்பதிகள் வாக்களித்தனர். 

ஆழ்வார்பேட்டையில்  நடிகர் தனுஷ் வாக்களித்தார்.

சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து  வாக்களித்தார்

நெல்லை கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாக்கை பதிவு செய்தார்.

பெரம்பலூர் : வேலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா வாக்களித்தார்.

சாலிகிராமத்தில்  உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் சீமான்.

கோவை முட்டத்துவயலில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வாக்குப்பதிவு செய்தார்.

மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி வாக்குப்பதிவு செய்தார்.

சென்னை நெற்குன்றம் வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 1 சதவீத அளவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அது உடனடியாக சரிசெய்யப்படுகிறது என கூறினார்.

வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம்

வடசென்னை - 4.58% 
தென் சென்னை - 5.67%
மத்திய சென்னை - 3.71%
பரமக்குடி - 8.13 %
நீலகிரி - 4%
ராமநாதபுரம் - 11.57%
நாமக்கல் - 7.94%
விருதுநகர் - 5.5%
மதுரை - 3.52%
காஞ்சிபுரம் - 12%
கோவை - 11.20%
பொள்ளாச்சி - 12.20%
பெரம்பூர் - 4.41%
நெல்லை - 2.37%
தேனி - 7.94%
நாகை - 9%

11 மணி நிலவரப்படி  தமிழகத்தில் 30.62  சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: 11 மணி நிலவரப்படி  தமிழகத்தில் 30. 62 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது..  ஆரணியில் அதிகபட்சமாக 36 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 22.89  சதவீத  வாக்குப்பதிவாகி உள்ளது. மதுரையில்  25.41 % வாக்குப்பதிவாகி உள்ளது என கூறினார்.

Next Story