கட்சியாக மாறுகிறது அமமுக: பொதுச்செயலாளராகிறார் தினகரன்


கட்சியாக மாறுகிறது அமமுக:  பொதுச்செயலாளராகிறார் தினகரன்
x
தினத்தந்தி 19 April 2019 12:59 PM IST (Updated: 19 April 2019 12:59 PM IST)
t-max-icont-min-icon

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

அமமுகவுக்கு பொதுவான சின்னம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் கட்சியாக பதிவு செய்வதாக தினகரன் தரப்பில் உறுதி மொழி கொடுக்கப்பட்டது. இதன்படி, அமமுக  கட்சியாக பதிவு செய்யப்படுகிறது. 

அமைப்பாக இருந்த அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா இருந்து வந்தார். துணை பொதுச்செயலாளராக தினகரன் பதவி வகித்தார். இந்த நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அமமுகவுக்கு சசிகலாவின் பெயரை முன்னிறுத்தவில்லை. 
1 More update

Next Story