ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 23 April 2019 7:07 AM GMT (Updated: 23 April 2019 7:07 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு ஆலையை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இடைக்காலமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கோரி இருந்தது. 

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 

அப்போது, ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் இருப்பதாக கூறிய தமிழக அரசின் வாதத்தை ஏற்று  வேதாந்தாவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.  மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

Next Story