தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்; வானிலை ஆய்வு மையம்


தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்; வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 28 April 2019 8:27 AM GMT (Updated: 28 April 2019 8:27 AM GMT)

தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று முதல் 3 நாட்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiMeteorologicalCenter

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து 30ந்தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும்.  ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை.  இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை.

தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்.  மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Next Story