மாநில செய்திகள்

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் + "||" + Two suspended in child trafficking case

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் ராசி புரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோடு சூரம்பட்டி அருள்சாமி (47) மற்றும் ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26) , ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வி (29), ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியை சேர்ந்த லீலா (36) உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். 

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அமுதவள்ளி கணவர் ரவிச்சந்திரன் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பார்வையற்ற வாலிபரிடம் ‘கறார்’ ஆக பேசி அபராதம் விதித்த பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்
அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பார்வையற்ற வாலிபரிடம் டிக்கெட் பரிசோதகர் மனிதாபிமானம் இன்றி ‘கறார்’ ஆக பேசி அபராதம் விதித்து உள்ளார். இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதால் நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
2. குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற 4 பெண்கள் கைது
வறுமையில் வாடும் தம்பதிகளிடம் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளை வாங்க வந்த 2 பேரும் பிடிபட்டனர்.
3. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் 13 பேரை பணியிடைநீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
4. புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு; மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வங்கியின் மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
5. கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை
கயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை