புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி ரத்து -ஐகோர்ட் கிளை


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி ரத்து -ஐகோர்ட் கிளை
x
தினத்தந்தி 30 April 2019 5:56 AM GMT (Updated: 30 April 2019 5:56 AM GMT)

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #KiranBedi

மதுரை,

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017-ல் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு  சிறப்பு அனுமதி  கொடுத்தது. இந்த் சிறப்பு அனுமதியை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு  மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து  செய்து  ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்வை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

Next Story