பெண்களை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமை இல்லை -சென்னை ஐகோர்ட்


பெண்களை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமை இல்லை -சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 30 April 2019 7:09 AM GMT (Updated: 30 April 2019 8:29 AM GMT)

பெண்களை காதல் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவோ அல்லது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவோ எந்த ஆணுக்கும் உரிமையில்லை என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை திருவான்மியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய கவின் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன்கோரி சென்னை ஐகோர்ட்டில்  கவின் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெடங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு கருணை காட்டுவது, மன்னிப்பது போன்ற இரக்கம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக கூறினார்.

பெண்களை காதல் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவோ அல்லது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவோ எந்த ஆணுக்கும் உரிமையில்லை. நீதிமன்றங்கள் சமூகத்திற்கு தேவையான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுத்தியுள்ளார். 

Next Story