எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை ஆஜர்படுத்த வேண்டும் பெங்களூரு சிறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் வருகிற 13-ந்தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் வருகிற 13-ந்தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு
ஜெ.ஜெ. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, அவரது சகோதரி மகன் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதைப்போல சசிகலா மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருப்பதால், காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆஜர்படுத்த உத்தரவு
பின்னர், அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கு 13-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சசிகலாவை எழும்பூர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story