மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு + "||" + DMK appeals to Supreme Court seeking a ban on sacking 3 AIADMK MLAs

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது  சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு
அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்தார்.

இந்த நிலையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், 3 அதிமுக எம்.எல்.எக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் திமுக தரப்பில் முறையிடப்பட்டது. திமுகவின்  முறையீட்டை ஏற்று திங்கள்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.