கோவையில் ஏடிஎம்மை உடைக்க முயற்சித்த ஆட்டோ டிரைவர்கள் கைது
கோவையில் ஏடிஎம்மை உடைக்க முயற்சி செய்த ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று நள்ளிரவு ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேர் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இருவர் வெளியே நிற்க ஒருவர் மட்டும் உடைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது அபாய ஒலி எழுந்ததும் பயந்து ஓடிவிட்டனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ டிரைவர்களாக உள்ள மூவர் இதனை செய்துள்ளனர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story