4 தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆர்.சரத்குமார் பிரசாரம்
4 தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 10-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்
சென்னை,
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 10-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். 10-ந்தேதி திருப்பரங்குன்றம், 12-ந்தேதி சூலூர், 15-ந்தேதி அரவக்குறிச்சி, 16, 17 ஆகிய தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 6-ந்தேதி ஓட்டப்பிடாரம், 9-ந்தேதி திருப்பரங்குன்றம், 13-ந்தேதி சூலூர், 14-ந்தேதி ஓட்டப்பிடாரம், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரம் செய்கிறார்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் சூலூரில் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) நடத்துகிறார். அதனை தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னூரில் 5-ந்தேதி (நாளை) பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது தொடர்பாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த இருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story