3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் கமல்ஹாசன் பேட்டி
3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நேற்று காலை ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். அதை நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, அது வாக்குகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது போன்ற முயற்சி இந்த தேர்தலிலும் தொடரும்.
3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அ.தி.மு.க.வுக்குள் இருக்கும் உள்கட்சி பூசலாகத்தான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து உள்ளதே?. அதை நீங்கள் ஆதரிப்பீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு நடிகர் கமல்ஹாசன், “கொண்டு வரலாம். இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

நான் இப்போது 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்துக் காக செல்கிறேன். முந்தைய பிரசாரம் போலவே இதுவும் மக்களிடம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். அதை நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, அது வாக்குகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது போன்ற முயற்சி இந்த தேர்தலிலும் தொடரும்.
3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அ.தி.மு.க.வுக்குள் இருக்கும் உள்கட்சி பூசலாகத்தான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து உள்ளதே?. அதை நீங்கள் ஆதரிப்பீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு நடிகர் கமல்ஹாசன், “கொண்டு வரலாம். இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.
Related Tags :
Next Story