பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது


பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது
x
தினத்தந்தி 4 May 2019 11:18 AM IST (Updated: 4 May 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மது விருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்ட 159 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள்  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டு  மது விருந்து நடத்தி விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.  மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.

புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அதில்  மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.  அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story