மாநில செய்திகள்

ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம் + "||" + To hunt play Entered into the wooden box Child's breathing death

ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம்

ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம்
சென்னையில், ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்தபோது மூடிக் கொண்டதில், சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை,

திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திருப்பதி சாமி என்பவரும் அவரது மனைவியும் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டனர். அவர்களது இரு பெண் குழந்தைகளான தனஸ்ரீ, சாருலதா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

வேலை முடிந்து வீடு திரும்பியபோது இரு மகள்களும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருப்பதிசாமி அவர்களை தேடியுள்ளார். வீட்டின் மாடியில் இருந்த மரப்பெட்டியில் இருந்து சத்தம் வரவே திறந்து பார்த்தபோது, இரு குழந்தைகளும் வாந்தி எடுத்தபடி மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாருலதாவுக்கு தனியார்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டின் போது, இரு குழந்தைகளும் மரப்பெட்டிக்குள் அமர்ந்துள்ளனர்.

பெட்டியை மூடுகையில், தாளிட்டுக் கொண்டது. இதன் காரணமாக இரு குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் பெற்றோர், கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சோகச் சம்பவம் எடுத்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் பஸ்ஸில் இருந்து கொத்தாக கீழே விழும் கல்லூரி மாணவர்கள்...!
சென்னையில் தடையை மீறி 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
2. பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு
தமிழகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றுள்ளது.
3. 1.56 கோடி ரூபாயை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்மநபர்
ஒரு கோடியே 56 லட்சம் ரூபாயை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பிச் சென்றார்.
4. பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் கொலை
சென்னை அருகே குரோம்பேட்டையில் பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்
சீரான முறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.