தமிழகம் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு 2 மணிக்கு தொடங்கியது
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான " நீட் " தேர்வு, இன்று (5-ம் தேதி) நாடெங்கும் தொடங்கியது.
தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதி வருகின்றனர்; தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
கோவை குனியமுத்தூரில் ஆதார் அட்டை இல்லாததால் நீட் தேர்வு எழுத திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஸ்ரீராமிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காஞ்சீபுரம் தேர்வு மையத்தில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என அட்டையில் எழுதி தேர்வு மைய வாசலில் வைத்த 2 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடையும். பானி புயல் பாதிப்பால் ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story