தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் - கமல்ஹாசன்
தமிழக அரசியல் தலைவர்கள் தன்னை விட சிறப்பாக நடிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHassan
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மத பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது.
எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றா விட்டால் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன். காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலத்தை போக்க முடியுமா என்ற சந்தேகத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி உள்ளனர். நான் செய்வேன் அல்ல; நாம் செய்வோம் என்று இணைந்து செய்தால்தான் நாடு விளங்கும். என்னால் பணம் கொடுக்க முடியாது; நான் இந்த மக்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என்று பேசினார்.

Related Tags :
Next Story