தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி விருதுநகரில் காமராஜர் சிலை அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி நடவடிக்கை
விருதுநகரில் காமராஜர் சிலையின் பின்புறம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் மூலம் உடனடியாக மூடப்பட்டது.
விருதுநகர்,
‘இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்?’ என்ற தலைப்பில் தந்தி டி.வி.யின் ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சி, விருதுநகரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தி.மு.க. சார்பில் கான்ஸ்டைன்டன் ரவீந்திரன், அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள், சமூக ஆர்வலர் ஜெகதீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் மன்றத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள், முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் பிறந்த பெருமைக்குரிய விருதுநகர் மாவட்டத்தில், அவரது சிலையின் பின்புறம் டாஸ்மாக் கடை இயங்குவதாக குற்றம் சாட்டினார். அதனை மூடச்சொல்லி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், அது மூடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அடுத்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காளியம்மாள் கூறுவது போல, காமராஜர் சிலையின் பின்புறம் டாஸ்மாக் கடை இருந்தால், முதல்- அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி மூடப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர், அல்லம்பட்டியில் இயங்கி வந்த அந்த டாஸ்மாக் கடை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், உடனடியாக அதை மூடும்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, அன்றைய தினம் இரவு 8.45 மணி அளவில், அங்கு சென்ற அதிகாரிகள், உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை மூடினர்.
பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மூடப்படாத அந்த டாஸ்மாக் கடை, தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் மூலம், உடனடியாக மூடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
அமைச்சரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளையும் இதேபோன்று விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
டாஸ்மாக் கடை மூடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் மூலம், இந்த புகார் வந்தவுடன் ஆய்வு செய்து உடனடியாக டாஸ்மாக் கடையை மூடி விட்டதாக கூறினார். காமராஜர் சிலைக்கு அருகில் மதுபான கடை இருக்காது என்று உறுதி அளித்த ராஜேந்திர பாலாஜி, இது போன்ற சரியான புகார்கள் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story