வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதல்; 7 பேர் பலி
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
வேலூர்,
வேலூரில் ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story