ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; 7 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்பூர்,
வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஆம்பூர் அருகே உள்ள ஜமீன் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற ‘டிரெய்லர்’ லாரியின் பின்பக்கம் நேற்று மாலை பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி லாரியின் அடியில் சிக்கி நின்றது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் அடியில் சிக்கிய காரை மீட்க முயன்றனர். ஆனால் காரை அவர்களால் வெளியே எடுக்க முடியவில்லை. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு காரை வெளியே எடுக்க முயற்சி நடந்தது. சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு லாரியின் அடியில் இருந்த கார் சற்று வெளியே வந்தது.
இதனை தொடர்ந்து காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த, 2 ஆண்களின் உடலை போலீசார் மீட்டனர். அதில் ஒருவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை வைத்து போலீசார் அதில் உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரங்களை சேகரித்தனர்.
அதில் காரில் வந்தவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் மும்பை புல்சாவல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையில் வேலை பார்க்கும் ஹேமந்த் தேஷ்முக் என்பதும் தெரியவந்தது. காரின் பாகங்களை உடைத்து இறந்தவர்களின் உடல்களை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் மீட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் இறந்து விட்டனர். அனைவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் ஹேமந்த் தேஷ்முக்கின் உறவினர்கள் என்பது தெரியவந்தது. ஹேமந்துடன் அவரது மனைவி மற்றும் சகோதரர் மிலிண்ட், அவரது மனைவி, 2 மகன்கள் பலியானது தெரியவந்தது. பெங்களூரை சேர்ந்த டிரைவர் மஞ்சுநாத் என்பவரும் விபத்தில் பலியாகிவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த அனைவரும் கோடைவிடுமுறையையொட்டி மராட்டிய மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தது தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து வேலூருக்கு வந்துவிட்டு திரும்பியபோது இவர்கள் விபத்தில் சிக்கி இறந்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story