பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது வழக்கமான நடவடிக்கை தான் - சத்யபிரதா சாஹூ


பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது வழக்கமான நடவடிக்கை தான் - சத்யபிரதா சாஹூ
x
தினத்தந்தி 7 May 2019 4:21 PM GMT (Updated: 7 May 2019 4:21 PM GMT)

பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது வழக்கமான நடவடிக்கை தான் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத 50 இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியுள்ளோம் என்று வருவாய் அலுவலர் விளக்கம் அளித்தார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியதாவது:- 

பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூம் எனப்படும் அறையில் பாதுகாப்பாக உள்ளன. பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். 

தேவை கருதியே தேனிக்கும் ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கை தான். மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என்றார்.

Next Story