150 எம்பிபிஎஸ் இடங்கள்: கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி


150 எம்பிபிஎஸ் இடங்கள்: கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 8 May 2019 12:08 PM IST (Updated: 8 May 2019 12:08 PM IST)
t-max-icont-min-icon

150 எம்பிபிஎஸ் இடங்களுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

கரூர் அரசு மருத்துவ கல்லூரி காந்திகிராமம் சணப்பிரட்டியில் அமைக்கப்படுகிறது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது வழக்குகள் முடிந்த பின் கரூர் நகரத்தின் மையப்பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பணிகள் நடந்து வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரிக்கு ஜெயலலிதா ரூ.229 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். நகரின் மையப்பகுதி என்பதால் கட்டிடத்தின் வடிவமைப்புகள் மாறுகிறது. இதனால் கூடுதல் நிதியாக ரூ.40 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளார். மொத்தம் ரூ.269 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படுகிறது.
 
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ வெளியிட்டு உள்ள தகவலில், 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார்.

Next Story