தற்போதைய அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதில் தவறு என்ன? - தங்க தமிழ்செல்வன்
தற்போதைய அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதில் தவறு என்ன? என அமமுக தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
மதுரை,
மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:-
எம்ஜிஆர் ஆட்சி என்று சொன்னீர்களே ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள். ஜெயலலிதா திறமையானவர், ஜானகி ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஜெவை கொண்டுவரத்தான் அவரை அமரவைத்தோம், உண்மைதானே.
இன்றைக்கு அதிமுக ஆட்சி, அம்மா ஆட்சி என சும்மா சொல்கிறீர்கள். ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. துரோகிகள் ஆட்சி நடக்கிறது. டிடிவி தினகரனை முதல்வராக்க இந்த ஆட்சியை கலைப்போம்.
கலைப்பது தப்பில்லையே? இந்த இடைத்தேர்தலில் 22 சீட்டு வென்றோம் என்றால் நாளைக்கு எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கவர்னரிடம் கொடுக்க வேண்டும். அப்போது நாங்க அதிமுகவுக்கு எதிராகத்தான் ஓட்டு போடுவோம். திமுகவும் அதிமுகவிற்கு எதிராக ஓட்டுப்போடும்,காங்கிரசும் எதிராக தானே ஓட்டு போடும், முஸ்லீம் லீக்கும் எதிராக தானே ஓட்டுப்போடும். அப்போ நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று அர்த்தமா? பிறகு ஏன் நான் சொன்னது தப்பு என்று சொல்கிறீர்கள் என கூறினார்.
Related Tags :
Next Story