தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
தினத்தந்தி 9 May 2019 7:55 PM IST (Updated: 9 May 2019 7:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

சென்னை,

அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு  மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் தருமபுரி, விழுப்புரம், செஞ்சி, வளத்தி, ஆனந்தபுரம், திருவண்ணாமலை செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி, உதகை, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சாமல்பட்டி,  போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story