ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 May 2019 7:15 PM GMT (Updated: 2019-05-09T23:03:39+05:30)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை விதிக்க முடியாது என்றும், இவ்வி‌ஷயத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 243 நாட்கள் ஆகிவிட்டன. எனவே விடுதலையை கவர்னர் இனியும் தாமதிப்பது முறையல்ல.

விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story