தேனியில் பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவரா?


தேனியில் பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவரா?
x
தினத்தந்தி 10 May 2019 1:52 PM GMT (Updated: 2019-05-10T19:22:53+05:30)

தேனியில் பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி,

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தேனியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கெளரி மோகன்தாஸ் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 நாட்டு துப்பாக்கிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து அனைத்து துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், மோகன்தாசிடம் விசாரணை செய்து வருகிறார்கள். 

மோகன்தாஸ் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவரா எனவும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கெளரி மோகன்தாஸ் வீட்டில் துப்பாக்கிகள் இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story