நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழிக்காததால் காதலனை கடத்தி தாக்கிய இளம்பெண், 2 பேர் கைது
நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழிக்காததால் ஏற்பட்ட தகராறில் காதலனை நண்பர்கள் மூலம் இளம்பெண் கடத்தினார். இதுதொடர்பாக பெண் போலீஸ் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் கசிம் முகமது. இவருடைய மகன் நவீத் அகமது (வயது 21). நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். கடந்த 9-ந் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டனர்.
அங்கு வைத்து அவரை கடுமையாக தாக்கி, அவருடைய விலை உயர்ந்த செல்போன், கைக்கெடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். தாக்குதலில் நவீத் அகமது மயங்கினார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்த அவர், அப்பகுதியில் இருந்த டீக்கடைகாரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் நவீத் அகமதுவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் 20 வயது மகளும், நவீத் அகமதுவும் காதலித்து வந்துள்ளனர். தொழில் நிமித்தம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் காதலனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கடந்த 6-ந் தேதி அந்த பெண் சென்னை வந்தார். அவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் நவீத் அகமதுவுடன் பல இடங்களுக்கு சென்று வந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக ‘செல்பி’ எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நவீத் அகமதுவும், இளம்பெண்ணும் அண்ணாநகரில் உள்ள ஒரு பூங்காவில் சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்த ‘செல்பி’ படத்தை அழிக்கும்படி காதலி கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காதலியை, நவீத் அகமது ‘ஹெல்மெட்’டால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தனித்தனியாக சென்றுவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தன்னுடைய நண்பர்கள் வேளச்சேரி நேரு நகர், பெரியார் தெருவில் வசிக்கும் பாஸ்கர் (26), சரவணன் (23), பாட்ஷா (22) ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் அவர் செல்போனில் இருக்கும் நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழித்துவிட்டு, நவீத் அகமதுவை கடுமையாக தாக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த கடத்தலுக்கு பாஸ்கர் தன்னுடைய தந்தையின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியில் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர். பாட்ஷா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாஸ்கரின் தாய் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.
சேத்துப்பட்டு தங்கும் விடுதியில் இருந்த காதலி, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில், அவர் அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டு சங்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் கசிம் முகமது. இவருடைய மகன் நவீத் அகமது (வயது 21). நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். கடந்த 9-ந் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டனர்.
அங்கு வைத்து அவரை கடுமையாக தாக்கி, அவருடைய விலை உயர்ந்த செல்போன், கைக்கெடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். தாக்குதலில் நவீத் அகமது மயங்கினார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்த அவர், அப்பகுதியில் இருந்த டீக்கடைகாரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் நவீத் அகமதுவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் 20 வயது மகளும், நவீத் அகமதுவும் காதலித்து வந்துள்ளனர். தொழில் நிமித்தம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் காதலனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கடந்த 6-ந் தேதி அந்த பெண் சென்னை வந்தார். அவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் நவீத் அகமதுவுடன் பல இடங்களுக்கு சென்று வந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக ‘செல்பி’ எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நவீத் அகமதுவும், இளம்பெண்ணும் அண்ணாநகரில் உள்ள ஒரு பூங்காவில் சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்த ‘செல்பி’ படத்தை அழிக்கும்படி காதலி கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காதலியை, நவீத் அகமது ‘ஹெல்மெட்’டால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தனித்தனியாக சென்றுவிட்டனர்.
இந்த கடத்தலுக்கு பாஸ்கர் தன்னுடைய தந்தையின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியில் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர். பாட்ஷா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாஸ்கரின் தாய் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.
சேத்துப்பட்டு தங்கும் விடுதியில் இருந்த காதலி, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில், அவர் அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டு சங்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story