மாநில செய்திகள்

தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது; தி.மு.க. அறிக்கை + "||" + Stalin's meeting with Telangana's CM is an honor; DMK Report

தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது; தி.மு.க. அறிக்கை

தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது; தி.மு.க. அறிக்கை
தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.
சென்னை,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார்.  அவர் திருச்சியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.

கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்ற தனது நெடுநாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்தார்.

இதன்பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்தார். சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்றது.  தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியேற்பு விழா; மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டார்
ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.
2. ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்பு
ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்கிறார்.
3. ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார்.
4. மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்
மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.
5. மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார்
மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை