கிரிக்கெட் : தென்னிந்திய அணி வெற்றி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கிரிக்கெட் : தென்னிந்திய அணி வெற்றி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 14 May 2019 3:01 PM GMT (Updated: 2019-05-14T20:31:07+05:30)

தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொண்ட லண்டனில் நடைபெற்ற  தெருவோர குழந்தைகள் கிரிக்கெட் தொடரில் தென்னிந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 

சென்னையிலிருந்து தொண்டு நிறுவன உதவியுடன் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் ஆட சென்ற தென்னிந்திய அணியில்  சென்னையை சேர்ந்த சூரிய பிரகாஷ், பால்ராஜ், நாகலெட்சுமி, மோனிசா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

லண்டனில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

அணியில் வெற்றிக்கு வித்திட்ட சென்னையை சார்ந்த நால்வருக்கும் வாழ்த்துகள்! உங்கள் சாதனைகள் தொடர திமுக துணை நிற்கும்! என பதிவிட்டுள்ளார்.

Next Story